ரசிகர்களுடனான சந்திப்பு - ரஜினிகாந்தின் விதிமுறைகள்

May 13, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 13 (டி.என்.எஸ்) வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை என 5 நாட்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கிறார்.


இதற்காக சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருச்சி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால், கரூர், சிதம்பரம், பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் என்று 17 மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை மட்டுமே இந்த 5 நாட்களில் சந்திக்க உள்ள ரஜினி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர்களை ஜூன் மாதம் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் தனி தனியாக புகைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ள ரஜினிகாந்த், பெரிய மாவட்டமாக இருந்தால் தலா 250 ரசிகர்களையும், சிறிய மாவட்டம் என்றால் தலா 200 ரசிகர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின் போது ரசிகர்களின் முழு விபரங்களையும் அறிந்துக் கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் சிலவற்றை ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதன்படி, ரசிகர்கள் வரும் போது மாலையோ, சால்வையோ தனக்கு போடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளவர், முக்கியமாக தனது காலில் விழுந்து ஆசி பெறக் கூடாது, என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளார்.