சென்னைவாசிகளின் ஜிலிர் பயணம் நாளை தொடங்குகிறது

May 13, 2017, Chennai

Ads after article title

சென்னை, மே 13 (டி.என்.எஸ்) சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவை நாளை (மே 14) தொடங்குகிறது.


இந்த பயணம் முழுவது சுரங்கம் வழித்தடம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரு பூங்கா முதல் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை, சுமார் 8 கி.மீட்டர் தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 ரயில் நிலையங்களை கொண்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சுரங்க பாதை ரயில் பயணத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று பத்திரிகையாளர்களுக்கு விளக்கினர். அப்போது சுரங்கப்பாதையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அதிகாரிகள் காட்டிய செய்முறை விளக்கம் பிரமிப்பாக அமைந்தது.

மொத்தத்தில், முழுக்க முழுக்க பாதுகாப்போடு சுரங்கப்பாதையில் ரயிலில் பயணிப்பது என்பது சென்னை வாசிகளுக்கு புது அனுபவமாக மட்டும் இன்றி ஜிலிர் அனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம்.